ரூ.12¾ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
ரூ.12¾ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி
செம்பட்டு:
திருச்சி விமான நிலையத்திற்கு இயக்கப்படும் விமானங்களில் சில பயணிகள் தங்கம் கடத்தி வருவது தொடர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக அதிக அளவில் திருச்சி விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த மதுரையை சேர்ந்த ஆண் பயணி ஒருவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தபோது அவர் தனது உடலில் மறைத்து ரூ.12 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பிலான 218 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story