5 ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வராக்கடன் ரூ.10 லட்சம் கோடி தள்ளுபடியை மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு தள்ளுபடி செய்துள்ளதாக என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் திருப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கூறினார்.

x

திருப்பூர்

பனியன் தொழில் பாதிப்பு

திருப்பூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் செந்தொண்டர் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நேற்று திருப்பூரில் நடைபெற்றது. யுனிவர்செல் தியேட்டர் அருகே நடந்த பொதுக்கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் பேசியதாவது:-

வலிமைமிக்க இந்தியாவை உருவாக்கவே கம்யூனிஸ்டுகள் பணியாற்றி வருகிறார்கள். தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சியில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மத்திய அரசின் தவறான கொள்கைக்கு எதிராகவும், பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். கலாசார ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் தி.மு.க. குரல் எழுப்பி வருகிறது.

மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கையால் திருப்பூர் ஆயத்த ஆடை, பனியன் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்கள் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மூலப்பொருட்களின் விலை உயர்வால் குறிப்பாக பஞ்சு, நூல் விலை உயர்வால் தொழில் முடங்கியுள்ளது. இந்திய பருத்தி கழகம் சிறு, குறு தொழில் முனைவோருக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை.

மின்கட்டண உயர்வு

மோடி அரசு கார்ப்பரேட் அரசாக உள்ளது. 5 ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வராக்கடன் ரூ.10 லட்சம் கோடியை தள்ளுபடி செய்துள்ளது. ஆனால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தினரின் கடனை பெற்று 90 நாட்களில் செலுத்தாவிட்டால் வராக்கடனாக வைத்து அவர்கள் மீண்டும் கடன் பெற முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கார்ப்பரேட்டுகள் மீண்டும் கடன் பெறுகிறார்கள். மத்திய அரசு இந்த இரட்டை வேடத்தை அகற்ற வேண்டும்.

தமிழகத்தில் தி.மு.க. அரசு மின்கட்டண உயர்வை அறிவித்துள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மின்கட்டண உயர்வால் பாதிக்கப்படுகிறது. இந்த மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று தி.மு.க. அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மின்கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெறும் என்று நம்புகிறோம். 100 நாட்கள் வேலை திட்டத்துக்கு மத்திய அரசு போதுமான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். தேர்தலுக்காக பா.ஜனதா அரசு மதவாத உணர்வை மக்களிடம் தூண்டி வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

மாநில செயற்குழு உறுப்பினர் சுகுமாறன் நிறைவுரையாற்றினார். கூட்டத்தில் பி.ஆர்.நடராஜன் எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர் காமராஜ் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

செந்தொண்டர் பேரணி

முன்னதாக மாலை கட்சியின் மாவட்ட அலுவலகம் முன் செந்தொண்டர் பேரணி தொடங்கியது. கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத் கொடியேற்றி வைத்து பேரணியை தொடங்கி வைத்தார். சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பேரணியாக செங்கொடி ஏந்தி வந்தனர். இந்த பேரணி பொதுக்கூட்டம் நடந்த யுனிவர்செல் தியேட்டர் முன் நிறைவடைந்தது. இதில் திரளானவர்கள் பங்கேற்றனர்.

Next Story