விராலிமலை முருகன் கோவிலில் ரூ.12½ லட்சம் உண்டியல் காணிக்கை
விராலிமலை முருகன் கோவிலில் ரூ.12½ லட்சம் உண்டியல் மூலம் காணிக்கையாக கிடைத்தது.
புதுக்கோட்டை
விராலிமலை முருகன் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா தலைமையிலும், செயல் அலுவலர் முத்துராமன், ஆய்வாளர் யசோதா ஆகியோர் முன்னிலையிலும் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில் ரொக்கம் ரூ.12 லட்சத்து 53 ஆயிரத்து 975-ம், தங்கம் 52 கிராம், 1 கிலோ 117 கிராம் வெள்ளியும் வசூலாகியிருந்தது. இதில் அறங்காவலர் ராமச்சந்திரன், மேற்பார்வையாளர் மாரிமுத்து, திருப்பணி குழு நிர்வாகிகள், அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story