புதிய 12 மோட்டார் சைக்கிள் ரோந்து வாகனங்கள்


புதிய 12 மோட்டார் சைக்கிள் ரோந்து  வாகனங்கள்
x

திருவண்ணாமலையில் குற்ற சம்பவங்களை தடுக்க புதிய 12 மோட்டார் சைக்கிள் ரோந்து வாகனங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள ஆசிரமங்களுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்த தினமும் ஏராளமானோர் வருகின்றனர்.

இதனால் திருவண்ணாமலைக்கு வருகை தரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட காவல்துறை சார்பில் திருவண்ணாமலையில் குற்ற சம்பவங்களை தடுக்க நகரம் மற்றும் கிரிவலப்பாதையில் அதிகளவில் போலீசாரை ரோந்து பணியில் ஈடுபடுத்தும் நோக்கத்தில் 12 புதிய மோட்டார் சைக்கிள் ரோந்து வாகனங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த புதிய மோட்டார் சைக்கிள் ரோந்து வாகனங்களை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர், சுப்பிரமணி, குணசேகரன், தயாளன் உள்பட போலீசார் உடனிருந்தனர்.


Next Story