குலசேகரன்பட்டினத்தில் வேன்-கார் மோதிய விபத்தில் 12 பேர் படுகாயம்
குலசேகரன்பட்டினத்தில் வேன்-கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 வயது பெண் குழந்தை உள்பட 12 பேர் படுகாயமடைந்தனர்.
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினத்தில் வேன்-கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 வயது பெண் குழந்தை உள்பட 12 பேர் படுகாயமடைந்தனர்.
வேன்-கார்
ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஆதிச்சநல்லூரை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் மகன் அன்பழகன் (வயது 34). இவர் தனது உறவினர்கள் மற்றும் மூன்று வயது பெண் குழந்தையுடன் குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய காரில் வந்து கொண்டிருந்தார். காரை அன்பழகன் ஓட்டினார்.
இதேபோல் தூத்துக்குடியில் இருந்து மணப்பாடு கோவிலுக்கு செல்ல ஒரு குடும்பத்தினர் வேனில் வந்து கொண்டிருந்தனர். வேனை தூத்துக்குடி அழகேசபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் ஓட்டி வந்தார்.
12 பேர் படுகாயம்
குலசேகரன்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது கார்-வேன் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், சாலை நடுவே வேன் கவிழ்ந்தது. காரும் பலத்த சேதம் அடைந்தது.
இதில் வேனில் வந்த தூத்துக்குடியை சேர்ந்த மடோனா (36), ரூபினா (28), பிகோ (22), கிப்சன் (21), நளினி (32), ஜெவின் (22), பபிஸ்டன் (22), கவின் (36), மாரியப்பன் (43), வானதி (58) மற்றும் 3 வயது குழந்தை உள்பட 12 பேர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் குலசேகரன்பட்டினம் போலீசார், உடன்குடி யூனியன் தலைவர் பாலசிங், பேரூராட்சி துணைத்தலைவர் சந்தையடியூர் மால்ராஜேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். ஈடுபாடுகளுக்குள் சிக்கிக் கிடந்தவர்களை மீட்டு உடன்குடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.