கெங்கவல்லி அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் 12 பவுன் நகை, பணம் திருட்டு


கெங்கவல்லி அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் 12 பவுன் நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 2 July 2023 1:46 AM IST (Updated: 2 July 2023 2:49 PM IST)
t-max-icont-min-icon

கெங்கவல்லி அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் 12 பவுன் நகை, பணம் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

சேலம்

கெங்கவல்லி:

ஓய்வு பெற்ற ஆசிரியர்

கெங்கவல்லி அருகே நடுவலூர் ஊராட்சி மன்ற அலுவலக பகுதியை சேர்ந்தவர் அங்கமுத்து (வயது 74). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருடைய மனைவி மோகனா (60). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு 2-வது அடுக்குமாடி மொட்டை மாடியில் தூங்க சென்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை 5 மணி அளவில் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

நகை, பணம் திருட்டு

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 12 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

நடுவலூர் ஊராட்சி மன்ற அலுவலகம், கடைவீதி மற்றும் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியில் திருட்டு நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story