12 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி


12 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
x

12 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தாலுகா (போளூர்- ஜமுனாமரத்தூர்- ஆலங்காயம்- வாணியம்பாடி) சாலையில் பாப்பனேரி கூட்ரோட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு நெடுஞ்சாலைத்துறை சார்பில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

கலெக்டர் பாஸ்கரபாண்டியன், க.தேவராஜி எம்.எல்.ஏ. ஆகியோர் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தனர். இந்த திட்டத்தின்படி வாணியம்பாடி-ஆலங்காயம் சாலையில் முதல் கட்டமாக 400 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அரசமரம், புளியமரம், வேப்பமரம், காட்டுமரம், பூவரச மரம் உள்ளிட்ட பல்வேறு வகைகளான மரக்கன்றுகள் நடப்பட்டது.

நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி, உதவி கோட்ட பொறியாளர் அன்புஎழில், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story