வேலூர் ஜெயிலில் ஒரே நேரத்தில் 121 போலீசார் அதிரடி சோதனை


வேலூர் ஜெயிலில் ஒரே நேரத்தில் 121 போலீசார் அதிரடி சோதனை
x

வேலூர் ஜெயிலில் ஒரே நேரத்தில் போலீசார் சிறை காவலர்கள் என 121 பேர் அடங்கிய குழுவினர் ைகதிகளிடம் திடீர் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்

வேலூர் ஜெயிலில் ஒரே நேரத்தில் போலீசார் சிறை காவலர்கள் என 121 பேர் அடங்கிய குழுவினர் ைகதிகளிடம் திடீர் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் ஜெயில்

வேலூர் தொரப்பாடியில் மத்திய ஆண்கள் ஜெயில், பெண்கள் ஜெயில் உள்ளது. இங்கு தண்டனை, விசாரணை கைதிகளாக 700-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். ஜெயில் கைதிகளிடம் தடை செய்யப்பட்ட கஞ்சா, பீடி, சிகரெட் மற்றும் செல்போன் போன்றவைகள் உள்ளதா? என ஜெயில் அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி, அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். எனினும் கைதிகள் ரகசியமாக அவற்றை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை 6 மணியளவில் வேலூர் போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், கருணாகரன் மற்றும் 56 போலீசார் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலுக்கு வந்தனர்.

அவர்கள் சிறைத்துறை காவலர்கள் 65 பேர் என 121 பேர் ஜெயில் வளயாகத்தில் அணிவகுத்து நின்றனர். அப்போது அவர்களுக்கு எவ்வாறு சோதனை நடத்த வேண்டும் என ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

2 மணி நேரம் நடந்த சோதனை

அதனை தொடர்ந்து அவர்கள் பல்வேறு குழுக்களாக கைதிகளின் அறைகளுக்கு சென்றனர். அங்கு கைதிகளை தீவிரமாக சோதனை செய்து வெளியே அனுப்பி விட்டு அவர்களின் அறைகள் மற்றும் கழிவறைகளில் அவர்கள் சோதனை நடத்தினர்.

தொடர்ந்து ஜெயில் வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. குறிப்பாக போலீசாரின் உயர் கண்காணிப்பு கோபுரங்களுக்கு அடிப்பகுதி மற்றும் பொது கழிவறை, குளியலறையில் சோதனை நடந்தது.

பெண்கள் ஜெயிலிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் செல்போன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தால் மத்திய ஜெயிலில் பரபரப்பு ஏற்பட்டது.



Next Story