122 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன


122 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன
x
தினத்தந்தி 17 Feb 2023 12:15 AM IST (Updated: 17 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ராஜாக்கமங்கலம் அருகே 122 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

ராஜாக்கமங்கலம் அருகே 122 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.

ஆமை குஞ்சுகள்

குமரி மாவட்டத்தில் கடல் ஆமைகளை பாதுகாக்கும் விதமாக வனத்துறை சார்பில் கடல் ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு சேகரிக்கப்படும் ஆமை முட்டைகள் துவாரகாபதி மற்றும் ராஜாக்கமங்கலம் முருங்கவிளை கடற்கரை பகுதியில் உள்ள ஆமை குஞ்சுகள் பொரிப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது.

பின்னர் முட்டைகள் பொரித்து குஞ்சுகள் வெளியே வந்ததும் அவை கடலில் விடப்பட்டு வருகிறது.

கடலில் விடப்பட்டன

அந்த வகையில் முட்டையில் இருந்து வெளியே வந்த 122 ஆமை குஞ்சுகளை நேற்று ராஜாக்கமங்கலம் முருங்கவிளை கடலில் விடும் நிகழ்ச்சி நடந்தது. அதனை வனச்சரக அலுவலர் அதியமான், வனவர் பிரான்சிஸ் அரவிந்த் மற்றும் கன்னியாகுமரி இயற்கை பாதுகாப்பு தன்னார்வ தொண்டு அமைப்பினர் இணைந்து ஆமை குஞ்சுகளை கடலில் விட்டனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், துவாரகாபதி மற்றும் ராஜாக்கமங்கலம் முருங்கவிைள கடற்கரை பகுதிகளில் தற்போது 1,204 ஆமை முட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் தற்போது 122 ஆமை குஞ்சுகள் நேற்று பொரித்தன. இந்த ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.

பின்னர் படிப்படியாக மற்ற ஆமை முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளியே வந்ததும் அந்த ஆமை குஞ்சுகள் கடலில் விடப்படும் என்றனர்.


Next Story