122 கிலோ புகையிலை பறிமுதல்; 3 பேர் கைது
122 கிலோ புகையிலை பறிமுதல்; 3 பேர் கைது
மதுரையில் கஞ்சா, புகையிலை, பாக்கு கடத்தல் விற்பனையை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன் பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் உதவி கமிஷனர் சண்முகம் உத்தரவின் பேரில் ஜெய்ஹிந்த்புரம் சப்-இன்ஸ்பெக்டர் சக்திமணிகண்டன் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி விசாரித்த போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினா். பின்னர் ஆட்டோவில் இருந்த 2 பைகளை சோதனை செய்த போது அதில் புகையிலை, பாக்கு போன்றவை இருப்பதை கண்டனர். பின்னர் அவர்களிடம் மேலும் விசாரித்த போது தெற்குவாசல் பகுதியில் உள்ள குடோனில் பாக்கு, புகையிலை போன்றவை விற்பனைக்காக வைத்திருப்பதாக தெரிவித்தனர். அதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாடக்குளத்தை சேர்ந்த ரஞ்சித்குமார்(வயது 34), தெற்குவாசல் சப்பாணி கோவில் தெருவை சேர்ந்த ரவிசங்கர் (40), ஜெய்ஹிந்த்புரம் ரவிச்சந்திரன் (47) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 122 கிலோ புகையிலை, பாக்கு மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.