கல்வி கற்காத 1,238 பேருக்கு 66 மையங்களில் பயிற்சி தொடக்கம்


கல்வி கற்காத 1,238 பேருக்கு 66 மையங்களில் பயிற்சி தொடக்கம்
x

கல்வி கற்காத 1,238 பேருக்கு 66 மையங்களில் பயிற்சி தொடங்கப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் 254 ஆண்களும், 984 பெண்களும் என மொத்தம் 1,238 கல்லாதவர்களுக்கு 66 மையங்களில் பயிற்சியானது நேற்று தொடங்கியது. இந்த பயிற்சியை வடக்கு மாதவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பெரம்பலூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் தேவகி, புதிய பாரத எழுத்தறிவு திட்ட ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதனை தொடர்ந்து வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பயிற்சியின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்து கூறினர். மேலும் மேற்பார்வையாளர் தேவகி மையம் நடைபெறும் இடங்கள் கற்போருக்கு வசதியாகவும், அனைவரும் கலந்து கொள்ளும் வகையிலும் பள்ளி வளாகம், சமுதாயக்கூடம், நூறு நாள் பணி நாளொன்றுக்கு 2 மணி நேரம் என நடைபெறும் இடங்களிலும், 6 மாதத்திற்கு தொடர்ந்து நடைபெறும் என்றும், தவறாது வருகை புரிந்தால் உங்களாலும் எழுத, படிக்க கற்றுக்கொள்ள முடியும் என்றும், இனி நீங்கள் தன்னிச்சையாக செயல்படலாம் என்றும், பணம் எடுக்கவோ, பஸ்சில் பயணம் செய்யவோ யாரையும் கெஞ்ச வேண்டியதில்லை என்பதையும் எடுத்து கூறினார். ஆசிரியர் பயிற்றுனர் ரமேசு கல்வி கற்க வயது ஒரு தடை இல்லை என்பதையும், நீங்களும் எளிதில் கற்றுக்கொள்ளலாம் என்றும் பேசினார். இந்த பயிற்சி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இறுதி வரை நடைபெற உள்ளது.


Next Story