முகநூல் மூலம் வாலிபரிடம் ரூ.1.24 லட்சம் அபேஸ்


முகநூல் மூலம் வாலிபரிடம் ரூ.1.24 லட்சம் அபேஸ்
x

வேலூரில் முகநூல் மூலம் வாலிபரிடம் ரூ.1.24 லட்சம் அபேஸ் செய்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை.

வேலூர்


வேலூர் சத்துவாச்சாரி செங்காநத்தம் மகாவீர் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 39). இவரது முகநூல் கணக்கில் உடனடி கடன் தருவதாக விளம்பரம் ஒன்று வந்தது.

இதைப்பார்த்த செந்தில்குமார் அந்த விளம்பரத்தில் உள்ள ஆன்லைன் முகவரியை தொடர்பு கொண்டார். அதில் உடனே கடன் பெற வேண்டுமானால் முன் பணம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

அதன்படி செந்தில்குமார் பணம் செலுத்தினார். தொடர்ந்து பல்வேறு கட்டணங்கள் கட்ட சொல்லிக்கேட்டனர். அதனை நம்பி ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 481 வரை அந்த இணைய தளத்தில் இருந்த வங்கி கணக்கில் அவர் செலுத்தினார்.

ஆனாலும் தொடர்ந்து அந்த இணையதளத்தில் இருந்து பல்வேறு கட்டணங்கள் கட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டே இருந்தனர். அப்போது செந்தில்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக பணத்தை திருப்பி தருமாறு அவர் இணையதளத்தில் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பணத்தை திருப்பித் தரவில்லை.

அப்போதுதான் அவர் போலி இணையதள முகவரியில் பணத்தை இழந்தது தெரியவந்தது. இதுகுறித்து வேலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆன்லைனில் வங்கிக்கடன் தருவதாக வரும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story