பிளஸ்-1 வேதியியல் தேர்வினை 12,563 பேர் எழுதினர்


பிளஸ்-1 வேதியியல் தேர்வினை 12,563 பேர் எழுதினர்
x

பிளஸ்-1 வேதியியல் தேர்வினை 12,563 பேர் எழுதினர். 401 பேர் ேதர்வு எழுத வரவில்லை.

விருதுநகர்


பிளஸ்-1 வேதியியல் தேர்வினை 12,563 பேர் எழுதினர். 401 பேர் ேதர்வு எழுத வரவில்லை.

பிளஸ்-1 தேர்வு

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பிளஸ்-1 தேர்வில் 9,763 மாணவர்களும் 11,459 மாணவிகளும் ஆக மொத்தம் 21,222 பேர் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 9,215 மாணவர்களும், 11,081 மாணவிகளும் ஆக மொத்தம் 20,296 பேர் தேர்வு எழுதினர். 548 மாணவர்களும் 378 மாணவிகளும் ஆக மொத்தம் 926 பேர் தேர்வு எழுத வரவில்லை. பாடவாரியாக தேர்வு எழுதியவர்கள் விவரம் வருமாறு:-

வேதியியல் தேர்வினை 5,630 மாணவர்களும், 7,334 மாணவிகளும் ஆக மொத்தம் 12,964 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 5,410 மாணவர்களும், 7,153 மாணவிகளும் ஆக மொத்தம் 12,563 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 220 மாணவர்களும், 181 மாணவிகளும் ஆக மொத்தம் 401 பேர் தேர்வு எழுத வரவில்லை.

புவியியல்- கணக்கியல்

கணக்கியல் தேர்வினை 3,968 மாணவர்களும், 3,953 மாணவிகளும் ஆக மொத்தம் 7,921 பேர் எழுத வேண்டிய நிலையில் 3,653 மாணவர்களும், 3,765 மாணவிகளும் ஆக மொத்தம் 7,418 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர்.

இதில் 315 மாணவர்களும், 188 மாணவிகளும் ஆக மொத்தம் 503 பேர் தேர்வு எழுத வரவில்லை. புவியியல் தேர்வினை 165 மாணவர்களும், 172 மாணவிகளும் ஆக மொத்தம் 337 பேர் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 152 மாணவர்களும், 163 மாணவிகளும் ஆக மொத்தம் 315 பேர் தேர்வு எழுதினர். இதில் மொத்தம் 22 பேர் தேர்வு எழுத வரவில்லை. மேற்கண்ட தகவலை மாவட்ட பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.


Related Tags :
Next Story