தூய இருதய ஆண்டவர் ஆலய 125-வது ஆண்டு விழா
தூய இருதய ஆண்டவர் ஆலய 125-வது ஆண்டு விழா நடந்தது.
நீலகிரி
ஊட்டி,ஜூன்.8-
ஊட்டி வண்டிச்சோலை பகுதியில் பழமை வாய்ந்த தூய இருதய ஆண்டவர் தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் விழா நடக்கும். இந்தநிலையில் 125-வது ஆண்டு விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஆலய பங்கு தந்தை தனீஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது.
இதில் உதவி பங்கு தந்தை ஜோசப் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் 38 குழந்தைகளுக்கு புதுநன்மை மற்றும் உறுதிப்பூசுதல் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. தேவாலயத்தில் இருந்து புறப்பட்டு சேரிங்கிராஸ் வரை சென்று மீண்டும் தேர் தேவாலயத்தை அடைந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதன் பின்னர் நற்கருணை ஆசிர்வாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது.
Related Tags :
Next Story