27,592 பயனாளிகளுக்கு ரூ.13½ கோடி நலத்திட்ட உதவிகள்


27,592 பயனாளிகளுக்கு ரூ.13½ கோடி நலத்திட்ட உதவிகள்
x

27,592 பயனாளிகளுக்கு ரூ.13½ கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

கரூர்

கரூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 2021-ம் ஆண்டு மே மாதம் முதல் கடந்த ஜூன் மாதம் வரை மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 10,583 பயனாளிகளுக்கு ரூ.66 லட்சத்து 90 ஆயிரத்து 500 மதிப்பீட்டிலும், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 14,764 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியே 30 லட்சத்து 89 ஆயிரத்து 769 மதிப்பீட்டிலும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாப்செட்கோ கடன் திட்டம்) கீழ் 1,167 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 8 லட்சத்து 78 ஆயிரமும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் இலவச தேய்ப்புப் பெட்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 300 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சத்து 99 ஆயிரத்து 960 மதிப்பீட்டிலும், முஸ்லிம், கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் சார்பில் 440 பயனாளிகளுக்கு ரூ.52 லட்சத்து 99 ஆயிரம் மதிப்பீட்டிலும், உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்கள் நலவாரியம் சார்பில் 21 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 82 ஆயிரம் மதிப்பீட்டிலும், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழக கடன் திட்டத்தின் கீழ் (டாம்கோ) 80 பயனாளிகளுக்கு ரூ.27 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பீட்டிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 78 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 18 ஆயிரத்து 560 மதிப்பீட்டிலும், உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் 151 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 77 ஆயிரத்து 399 மதிப்பீட்டிலும் என மொத்தம் கடந்த 2 ஆண்டுகளில் 27,592 பயனாளிகளுக்கு ரூ.13 கோடியே 46 லட்சத்து 73 ஆயிரத்து 188 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.


Next Story