வெறி நாய் கடித்து 13 ஆடுகள் சாவு


வெறி நாய் கடித்து 13 ஆடுகள் சாவு
x

தூசி அருகே பல்லாவரம் கிராமத்தில் வெறிநாய் கடித்ததில் 13 ஆடுகள் செத்தன.

திருவண்ணாமலை

தூசி

தூசி அருகே பல்லாவரம் கிராமத்தில் வெறிநாய் கடித்ததில் 13 ஆடுகள் செத்தன.

செம்மறி ஆடுகள்

வெம்பாக்கம் தாலுகா பல்லாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியம்மாள் (வயது 55). கணவரை இழந்த கன்னியம்மாள் 50 செம்மறி ஆடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறார்..

நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய ஆடுகளை இரவு வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள ஆட்டுக் கொட்டைகயில் அடைத்து வைத்துள்ளார்.

நேற்று காலை அங்கு சென்ற போது, ஆட்டுக் கொட்டகையில் இருந்த 13 செம்மறி ஆடுகள் ரத்தக் காயங்களுடன் இறந்த நிலையில் இருந்தன.

மேலும், 8 ஆடுகள் பலத்த ரத்தக் காயங்களுடன் கத்திக் கொண்டு இருந்தன. ஆட்டுக் கொட்டகையில் இருந்த செம்மறி ஆடுகளை அப்பகுதியில் இருந்த வெறிநாய்கள் கடித்துச் சென்றதும் இதனால் ஆடுகள் இறந்ததும் தெரியவந்துள்ளது.

விசாரணை

தகவல் அறிந்த ஊராட்சி மன்றத் தலைவர் ரஞ்சித், பல்லாவரம் கிராம நிர்வாக அலுவலர் அ.ஹாஜாசெரீப் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரி்ல் வந்து பார்வையிட்டு கன்னியம்மாளுக்கு ஆறுதல் தெரிவித்தனர். .

வெம்பாக்கம் கால்நடை மருத்துவர் மோகன்குமார், காயம் பட்ட ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தார். மேலும், நாய்கள் கடித்ததில் இறந்த ஆடுகளை புதைக்க உத்தரவிட்டார்.


Next Story