மேட்டூர் அருகே மர்ம விலங்குகள் கடித்து 13 ஆடுகள் செத்தன


மேட்டூர் அருகே   மர்ம விலங்குகள் கடித்து 13 ஆடுகள் செத்தன
x
தினத்தந்தி 16 Dec 2022 1:30 AM IST (Updated: 16 Dec 2022 4:30 PM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அருகே மர்ம விலங்கு கடித்ததில் 13 ஆடுகள் செத்தன. ஆடுகள் செத்தன

சேலம்

மேட்டூர்,

ஆடுகள் செத்தன

மேட்டூரை அடுத்த ராமன் நகர் அருகே மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியை ஒட்டி புது வேலுமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பு செட்டி (வயது 60), விவசாயி. இவர் தனது விவசாய நிலத்தில் பட்டி போட்டு செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை கருப்பு செட்டி ஆட்டுப்பட்டிக்கு சென்றார். அப்போது 13 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து குடல் சரிந்த நிலையில் கிடந்தன. 6 ஆடுகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி கொண்டிருந்தன.

வனத்துறையினர் விசாரணை

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆடுகளை காப்பாற்ற கால்நடை மருத்துவக்குழுவினருக்கு தகவல் தெரிவித்தார். கால்நடை மருத்துவக்குழுவினர் வந்து காயமடைந்த ஆடுகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தனர். இந்த கிராமத்தில் ஆடுகளை மர்ம விலங்குகள் கடித்த சம்பவம் அந்த கிராம மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இது குறித்து மேட்டூர் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story