ஆருத்ரா பண மோசடி வழக்கில் இதுவரை 13 பேரை கைது - போலீசார் தகவல்


ஆருத்ரா பண மோசடி வழக்கில் இதுவரை 13 பேரை கைது - போலீசார் தகவல்
x

முடக்கப்பட்ட மற்றும் மீட்கப்பட்ட சொத்துக்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீட்டாளர்களிடம் முதலீடாக பெற்ற 2,438 கோடி ரூபாயை மோசடி செய்ததாக பொளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக செயல்பட்டு வந்த ஹரீஷ், மாலதி ஆகியோரை போலீசார் விசாரணையில் எடுத்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் இதுவரை இந்த விவகாரத்தில் தொடர்புடைய 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.முடக்கப்பட்ட மற்றும் மீட்கப்பட்ட சொத்துக்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அடுத்த 6 மாதத்திற்குள் மக்கள் இழந்த பணத்தை திருப்பி கொடுக்க வாய்ப்புள்ளது என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.


Next Story