சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது


சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது
x
தினத்தந்தி 2 Jun 2023 12:15 AM IST (Updated: 2 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சூதாட்ட விளையாட்டை முழுவதுமாக கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.அதன் ஒரு பகுதியாக தனிப்படை போலீசார், நாகூர் தெற்கு பால்பண்ணைச்சேரி பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடம் இருந்து ரூ.72 ஆயிரத்து 670 மற்றும் சீட்டுக்கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல நாகை நகர் பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.இது போன்ற சூதாட்ட குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story