பொதுமக்களை அச்சுறுத்திய 13 தெருநாய்கள் சிக்கின
பொதுமக்களை அச்சுறுத்திய 13 தெருநாய்கள் சிக்கின
நீலகிரி
ஊட்டி
ஊட்டி நகரில் பல்வேறு இடங்களில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்தது. இவை அந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரையும் அச்சுறுத்தி வந்தன. இதன் காரணமாக தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது.
இந்த நிலையில் ஊட்டி நகராட்சி ஆணையாளர் காந்திராஜன் உத்தரவின்பேரில் விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்புக்கான சங்கத்தினர்(நீலகிரி) ஊட்டி ஏ.டி.சி. சாலையில் இருந்து ஸ்டெர்லிங் வரை பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்த 13 தெருநாய்களை பிடித்தனர்.
Related Tags :
Next Story