13 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


13 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

நாங்குநேரியில் 13 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் நெல்லை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துக்குமார், இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி மற்றும் போலீசார் நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 13 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

லாரியை ஓட்டி வந்த டிரைவர் கன்னியாகுமரி மாவட்டம் திக்குறிச்சியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மேலும் சிலரை தேடிவருகிறார்க்ள.


Next Story