புளி வரத்து குறைந்ததால் கிலோ 130-க்கு விற்பனை


புளி வரத்து குறைந்ததால் கிலோ 130-க்கு விற்பனை
x

ஒடுகத்தூர் சந்தைக்கு புளி வரத்து குறைந்ததால் அதன் விலை கிலோ ரூ.130 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து வரத்து குறைந்தால் மேலும் விலை உயரும் நிலை உள்ளது.

வேலூர்

வெள்ளிக்கிழமை சந்தை

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா இலவம்பாடி என்றால் முள்ளு கத்தரிக்காய் எப்படி பெயர் பெற்றதோ அதேபோன்று மற்றொரு ஊரான ஒடுகத்தூரில் விற்கப்படும் புளி சுவை மிகுந்தததாக தமிழக அளவில் பெயர் பெற்று விளங்குகிறது.

இதற்கு காரணம் ஒடுகத்தூர் பகுதியில் உள்ள மலைகளில் உள்ள புளியமரங்களில் காய்ப்பதுதான். இவ்வாறு மலையில் உள்ள மரங்களில் புளியம்பழம் காய்ப்பது 100 சதவீதம் இயற்கையானது, ரசாயன கலப்பில்லாதது என்பதால் இதனை வெளி மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்தும் கொள்முதல் செய்து செல்கின்றனர்.

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை இங்கு சந்தைகூடும்போமது புளி கிராக்கியுடன் விற்பனையாகும்.

குறைவான வரத்து

இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே புளிவரத்து இருந்தது. தரமான புளி மார்ச் மாதத்தில் வருவதால் அதிக அளவில் வியாபாரிகள் ஒடுகத்தூர் சந்தைக்கு வந்து புளி வாங்கிசென்றனர். ஆனால் அதன் விலை உயர்ந்து காணப்பட்டது.

இது குறித்து வியாபாரிகளிடம் கேட்டதற்கு இந்த ஆண்டு புளிவரத்து குறைவாகவே காணப்படுகிறது. ஒரு கிலோ ரூ.70 முதல் விற்பனையாகிறது. தரமான புளி 130-க்கு விற்பனையாகிறது. இந்த ஆண்டு விலை குறைவதற்கான வாய்ப்பு இல்லை. வரும் வாரங்களில் வியாபாரிகள் அதிக அளவில் புளி வாங்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் புளி வரத்து குறைவாக இருப்பதால் ஒரு கிலோ புளி ரூ.160 வரை உயரும் என்றனர்.


Next Story