1,300 டன் அரிசி நெல்லை வந்தது
ஆந்திராவில் இருந்து ரெயில் மூலம் 1,300 டன் அரிசி நெல்லை வந்தது.
திருநெல்வேலி
வெளிமாநிலங்களில் இருந்து தென்மாவட்டங்களுக்கு அவ்வபோது சிறப்பு ரெயில்கள் மூலம் அரிசி, கோதுமை, உரம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வரப்படுகிறது. நேற்று முன்தினம் தெலுங்கானாவில் இருந்து 2 ஆயிரத்து 600 டன் அரிசி வந்தது. அவை நெல்லை ஸ்ரீபுரத்தில் உள்ள குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டது. அதே போல் நேற்று மதியம் ஆந்திராவில் இருந்து 1,300 டன் அரிசி சிறப்பு ரெயில் மூலம் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. 21 பெட்டிகளில் கொண்டு வரப்பட்ட அரிசி மூட்டைகள் நெல்லை, ஆலங்குளம், நாங்குநேரி, சங்கரன்கோவில் தென்காசி உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
Related Tags :
Next Story