வேலூர் மாவட்டத்தில் 1,301 வாக்குச்சாவடிகள்


வேலூர் மாவட்டத்தில் 1,301 வாக்குச்சாவடிகள்
x

வேலூர் மாவட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி வெளியிட்டார். அதில் 1,301 வாக்குச்சாவடிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர்

வேலூர் மாவட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி வெளியிட்டார். அதில் 1,301 வாக்குச்சாவடிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு

வேலூர் மாவட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடும்நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் முகமதுசகி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி வைக்குச்சாவடி பட்டியலை வெளியிட்டார். வேலூர் உதவி கலெக்டர் பூங்கொடி உடன் இருந்தார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி பேசியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2023-க்கான கால அட்டவணை வெளியிட்டுள்ளது. அதன்படி 9.11.2022-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டு 1.1.2023-ல் 18 வயது நிறைவு பெற்றவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், பெயர், வயது, முகவரி திருத்தங்கள் மேற்கொள்ளவும் தேர்தல் ஆணையம் கால அட்டவணை அளித்துள்ளது. இந்த சுருக்க முறை திருத்தப்பணி மேற்கொள்வதற்கு முன்பாக வாக்குச்சாவடிகள் வரையறை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி 1,500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் 2-ஆக பிரித்து புதிய வாக்குச்சாவடிகள் அமைத்தல், வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளி வளாகத்தில் பழுதடைந்த பழைய கட்டிடத்தில் உள்ள வாக்குச்சாவடிகளை அதே வளாகத்தில் உள்ள புதிய கட்டிடத்துக்கு மாற்றுதல், ஒரு வாக்கச்சாவடி வளாகத்தில் உள்ள 2 வாக்குச்சாவடிகளை 1,500 வாக்காளர்களுக்கு மிகாமல் ஒன்றிணைத்தல் போன்ற வழிமுறைகளை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

1,301 வாக்குச்சாவடிகள்

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் 1,301 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இவை மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவுரையின் பேரில், வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் அனைத்து வாக்குச்சாவடிகளையும் தணிக்கை செய்து தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்கு உட்பட்டு பரிசீலனை செய்து வரைவு வாக்குச்சாவடி பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டதன் பேரில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியல் உதவி கலெக்டர் அலுவலகம், வேலூர் மாநகராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அரசியல் கட்சியை சேர்ந்தவர்களுக்கு ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனில் தெரிவிக்கலாம். 3 மாதங்களுக்கு ஒருமுறை இந்த பட்டியல் வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வரையறை செய்யப்பட்டு வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story