வாலாஜா தபால் அலுவலகத்தின் 130-வது ஆண்டு விழா
வாலாஜா தபால் அலுவலகத்தின் 130-வது ஆண்டு விழா நடைபெற்றது.
வாலாஜாவில் உள்ள தபால் அலுவலகம் கடந்த 1892-ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்டது. இந்த அலுவலகத்தின் 130-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு வாலாஜா அஞ்சல் அலுவலர் சவுந்தரி தலைமை தாங்கினார். உட்கோட்ட அஞ்சல் ஆய்வாளர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். இதில் அரக்கோணம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சிவசங்கரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது இந்திய அஞ்சல் துறை மிக பழமையானதாகும். அஞ்சல் சேவை மக்களுடன் பின்னிப்பிணைந்து உள்ளது. இன்று இந்திய அரசின் தலைசிறந்த துறையாக உள்ளது. அஞ்சல்துறையில் திறமை மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் ஊழியர்களை பணியமர்த்துகிறார்கள். இதன் மூலம் ஊழலும், லஞ்சமும் இல்லாத கண்ணியமிக்க துறையாக விளங்குகிறது. தொடர்ந்து அடுத்த தலைமுறைக்கு அஞ்சல் துறையை எடுத்துச் செல்வதில் ஊழியர்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்றார்.
முன்னதாக கடந்த 55 ஆண்டுகளாக வாலாஜா அஞ்சல் அலுவலகத்தில் கணக்கு வைத்துள்ள மூத்த வாடிக்கையாளர் ராம்குமார் என்பவருக்கு சால்வை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து விழாவை முன்னிட்டு கேக் வெட்டப்பட்டது.