காட்பாடிக்கு 1,345 டன் உரம் வருகை


காட்பாடிக்கு 1,345 டன் உரம் வருகை
x

ஆந்திராவில் இருந்து காட்பாடிக்கு 1,345 டன் உரம் ரெயில் மூலம் வந்தது.

வேலூர்

ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபட்டணம் கோட்டையில் இருந்து 1,345 டன் யூரியா மற்றும் டி.ஏ.பி. உர மூட்டைகள் ரெயில் மூலம் காட்பாடிக்கு கொண்டுவரப்பட்டது.

இணை இயக்குனர் ஸ்டீபன் ஜெயக்குமார் உத்தரவின்பேரில், துணை இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) லட்சுமணன் முன்னிலையில் வேலூர் மாவட்டத்துக்கு 94 டன் யூரியா, 30 டன் டி.ஏ.பி., ராணிப்பேட்டைக்கு 60 டன் யூரியா, 85 டன் டி.ஏ.பி., திருப்பத்தூர் மாவட்டத்துக்கு 30 டன் டி.ஏ.பி. உரம் லாரிகளில் விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மீதம் உள்ள உரங்கள் திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம் மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 212 டன் உரங்கள் குடோனில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story