136 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன


136 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன
x
தினத்தந்தி 3 Dec 2022 12:15 AM IST (Updated: 3 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

சேரங்கோட்டில் குறைதீர்ப்பு முகாமில் 136 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

நீலகிரி

பந்தலூர்,

பந்தலூர் அருகே சேரங்கோடு சமுதாயக்கூடத்தில் வருவாய்த்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதரத்துல்லா தலைமை தாங்கினார். பந்தலூர் தாசில்தார் நடேசன், பிதிர்காடு வனச்சரகர் ரவி, துணை தாசில்தார் குமார், வருவாய் ஆய்வாளர் விஜயன், கிராம நிர்வாக அலுவலர்கள் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேரங்கோடு படச்சேரி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தொகுப்பு வீடு, முதியோர் உதவித்தொகை, சாலை, தெருவிளக்கு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து 136 கோரிக்கை மனுக்களை அளித்தனர். முகாமில் சேரங்கோடு ஊராட்சி தலைவர் லில்லி எலியாஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story