137 பழங்குடியின மகளிருக்கு சான்றிதழ்
கால்நடை வளர்ப்பு பயிற்சி முடித்த 137 பழங்குடியின மகளிருக்கு சான்றிதழ்களை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்
திருப்பத்தூர் அருகே புதூர்நாடு மலையில் இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் சார்பில் கால்நடைகள் வளர்ப்பு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கினார்.
அ.நல்லதம்பி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இந்தியன் வங்கி மண்டல மேலாளர் பிரசன்னகுமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் அரவிந்த்குமார் வரவேற்றார்.
இதில் கால்நடை வளர்ப்பில் பயிற்ச்சி பெற்ற 137 மழைவாழ் பழங்குடியின மகளிர்களுக்கு கலெக்டர் பாஸ்கரபாண்டியன் சான்றிதழ்களை வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு 100 விவசாயிகளுக்கு சாமை விதைகள், 150 பேருக்கு தென்னங்கன்றுகளையும் கலெக்டர் வழங்கினார்.
அதைத்தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் புதூர்நாடுமலை ஊராட்சி பழங்குடியினர் நலத்திட்ட அலுவலகம் மற்றும் சென்னை டி.ஆர்.ஐ.எப்.ஈ.டி. சார்பில் புதூர்நாடு வந்தன் விகாஸ் கேந்திரா திட்டத்தின் கீழ் புதூர்நாடு புளி, சாமை மதிப்பு கூட்டு நிலையத்தை திறந்து வைத்து பேசினார்.
நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் ரேணுகாதேவி, வேளாண்மை இணை இயக்குனர் பாலா, பழங்குடியினர் நல திட்ட அலுவலர் கலைச்செல்வி, தாட்கோ மாவட்ட மேலாளர் ராஜஸ்ரீ, ஒன்றியக்குழு தலைவர் விஜயாஅருணாச்சலம், வேளாண்மை உதவி இயக்குநர்கள் அப்துல்ரஹ்மான், ராகினி, பசுமை தாய்நாடு அறக்கட்டளை நிறுவன தலைவர் சத்யராஜ், பிரிடம் பவுண்டேசன் நிறுவனர் ஏ.ராமச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.