டி.கல்லுப்பட்டி அருகே 14 ஆடுகள் மர்ம சாவு
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே 14 ஆடுகள் மர்மமான முறையில் இறந்தது
மதுரை
பேரையூர்
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வி.கோபாலபுரத்தை சேர்ந்தவர் மார்கழிவாசகன் (வயது 41).ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது தனது கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார். மேலும் ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று மதியம் இவரது ஆடுகளை இவரது தந்தை ராமையா மேய்த்து விட்டு தனது வீட்டு அருகே உள்ள கொட்டத்தில் அடைத்துள்ளார். அங்கு ஆடுகளுக்கு கழனி தண்ணீர் வைத்துள்ளனர். கழனி தண்ணீர் குடித்த சிறிது நேரத்தில் 14 ஆடுகள் ஒன்றன்பின் ஒன்றாக மயங்கி விழுந்து இறந்தன. இதுகுறித்து மார்கழிவாசகன் வில்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆடுகள் எப்படி இறந்தது, தண்ணீரில் விஷம் வைத்து கொல்லப்பட்டதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். மேலும் கால்நடை துறையினர் இறந்த ஆடுகளை பிரேத பரிசோதனை செய்தனர்.
Related Tags :
Next Story