எட்டயபுரம் அருகே தெரு நாய்கள் கடித்து 14 ஆடுகள் பலி


எட்டயபுரம் அருகே தெரு நாய்கள் கடித்து 14 ஆடுகள் பலி
x

எட்டயபுரம் அருகே தெரு நாய்கள் கடித்து 14 ஆடுகள் பலியாகின.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

கோவில்பட்டி ராஜூவ் நகரை சேர்ந்தவர் சங்கர் ராஜா. இவர் எட்டயபுரம் அருகே உள்ள குளத்துள்வாய்பட்டியில் ஆட்டுப்பண்ணை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலையில் 40 ஆடுகளை மேய்த்து விட்டு தொழுவத்தில் அடைத்து விட்டு கோவில்பட்டிக்கு சென்றார்.

நேற்று காலையில் தொழுவத்துக்கு வந்தபோது 8 ஆடுகள் தெருநாய்கள் கடித்து இறந்து கிடந்தன. சிறிது தூரத்தில் மேலும் 6 ஆடுகள் இறந்து கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்த பகுதியில் தெருநாய்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதாகவும், அடிக்கடி அவை ஆடுகளை கடித்து கொல்வதுடன், பொதுமக்களையும் கடித்து வருவதாக கூறப்படுகிறது. இப்பகுதியிலுள்ள தெருநாய்களை அப்புறப்படுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story