14 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்


14 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்
x

குடவாசல், கொரடாச்சேரி பகுதியில் 14 கிலோ கெட்டுப்போன மீன்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் தரமான மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் அறிவுறுத்தினார். அதன்படி குடவாசல் பேரூராட்சி பகுதிகளில் உள்ள மீன் விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் அன்பழகன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் மீன்வளத்துறை உதவி இயக்குனர் சண்முகம் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

அப்போது அவர்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் மீன்கள் தரமானதாக உள்ளதா?, மீன்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக ரசாயனம் பயன்படுத்தப்பட்டுள்ளதா? என ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது 6 கடைகளில் கெட்டுப்போன மீன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அதன்பேரில், 14 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. இதுகுறித்து கடை விற்பனையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து கொரடாச்சேரி ரெயில் நிலையம் அருகே உள்ள மீன் விற்பனை கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


Next Story