கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா, லாட்டரி சீட்டுகள் விற்ற 14 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா, லாட்டரி சீட்டுகள் விற்ற 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி
தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை நடைபெறுகிறதா? என ஓசூர் டவுன், சிப்காட், சூளகிரி, பேரிகை, பாரூர், போச்சம்பள்ளி, ராயக்கோட்டை, மத்தூர் பகுதிகளில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது இந்த பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா விற்றதாக 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2,600 மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் லாட்டரி சீட்டுகளை விற்றதாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம இருந்து 18 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story