கரூர், தோகைமலை பகுதிகளில் மது விற்ற 14 பேர் கைது


கரூர், தோகைமலை பகுதிகளில் மது விற்ற 14 பேர் கைது
x

கரூர், தோகைமலை பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தி மது விற்றதாக 14 பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர்

கரூர் மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மதுபானங்களை பதுக்கி, அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. தகவலின்பேரில், மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா, சப்-இன்ஸ்பெக்டர் அழகுராம் தலைமையிலான போலீசார் கரூர் ஆத்தூர், மண்மங்கலம், புதூர், செம்படை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அந்த பகுதிகளில் மது விற்றதாக 10 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 87 மதுப்பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

தோகைமலை

தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்- இன்ஸ்பெக்டர் மதியழகன் தலைமையிலான போலீசார் தோகைமலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சின்னரெட்டிபட்டியை சேர்ந்த சிவக்குமார் மனைவி மலர்கொடி (வயது 36) தனது பெட்டிக்கடையிலும், அ.உடையபட்டியை சேர்ந்த காமராஜ் (59) அவரது பெட்டிக்கடையிலும், அதே ஊரை சேர்ந்த சின்னதுரை (47) அவரை வீட்டின் பின்புறத்திலும், அதே ஊரை சேர்ந்த மாரியாயி (41) அவரது பெட்டிக்கடையிலும் சட்டவிரோதமாக மதுவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

கரூர், தோகைமலை பகுதிகளில் மொத்தம் 14 பேர் மது விற்றதாக கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story