வீட்டில் இருந்த 14 பவுன் நகைகள் திருட்டு


வீட்டில் இருந்த 14 பவுன் நகைகள் திருட்டு
x

வீட்டில் இருந்த 14 பவுன் நகைகள் திருட்டு

தஞ்சாவூர்

தஞ்சை மாதாக்கோட்டை மேல தெருவை சேர்ந்தவர் அலெக்ஸ்சாண்டர் மனைவி ஜெசிந்தா (வயது 49). இவர் தன்னுடைய வீட்டில் அாிசி பையில் தனது நகைகளை வைத்திருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் அரிசி பையில் வைத்திருந்த நகையை காணவில்லை. மேலும் நகையை பல்வேறு இடங்களில் தேடி பார்த்து அது கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெசிந்தா 14 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடி சென்று விட்டதாக தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அபிராமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 14 பவுன் நகையை யாரும் திருடி சென்று விட்டார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story