வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் திருட்டு


வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் திருட்டு
x

வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் திருட்டு

திருப்பூர்

வீரபாண்டி

திருப்பூர் வீரபாண்டியில் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன்நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர்.

இது குறித்து ேபாலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருட்டு

திருப்பூர் பல வஞ்சிபாளையம் லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி சரஸ்வதி (வயது 45). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி விட்டது. இந்த நிலையில் சரஸ்வதி கடந்த 12-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு திண்டுக்கல்லில் உள்ள தனது மகள் வீட்டிற்குச் சென்றார். பின்னர் நேற்று வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி வீட்டிற்குள் சென்று பார்த்தார்.

அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 14 பவுன் தங்க நகைகள் ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர். இது குறித்து வீரபாண்டி போலீசாருக்கு சரஸ்வதி தகவல் தெரிவித்தார். உடனே சம்பவம் நடந்த வீட்டிற்கு போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். மேலும் அதில் கிடைத்த ஆதாரங்களை வைத்துக்கொண்டு விசாரணையில் ஈடுபட்டனர்.

போலீசார் விசாரணை

சரஸ்வதி வெளியூர் சென்றதை அறிந்து கொண்ட ஆசாமிகள் அங்கு சென்று வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.


Next Story