கேரளாவுக்கு கடத்த முயன்ற 140 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்


கேரளாவுக்கு கடத்த முயன்ற 140 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்
x

கேரளாவுக்கு கடத்த முயன்ற 140 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்

கன்னியாகுமரி

புதுக்கடை:

கேரளாவுக்கு கடத்த முயன்ற 140 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல் செய்தனர்.

மண்எண்ணெய் பறிமுதல்

புதுக்கடை போலீஸ் தனிப்பிரிவு ஏட்டுகள் சுனில் மற்றும் ஜெனிஸ் ஆகியோர் மாலையில் அம்சி சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கேரள பதிவு எண் கொண்ட ஒரு ஆட்டோ வந்தது. அதை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது, அதில் 140 லிட்டர் மானிய விலை மண்எண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

கைது

அப்போது கேரள மாநிலம் பீமாபள்ளி பகுதியை சேர்ந்த ஹசன் கண்ணு (வயது 40) மற்றும் பூந்துறை பகுதியை சேர்ந்த ஷாலி (29) என்ற பெண்ணும் சேர்ந்து இணையம் புத்தன்துறை பகுதியை சேர்ந்த பிரமிளா (42) என்பவரிடமிருந்து மண்எண்ணையை வாங்கி கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார், பறிமுதல் செய்யப்பட்ட மண்எண்ணெயை கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலர் வயோலாபாயிடம் ஒப்படைத்தனர்.


Next Story