ஜமாபந்தியில் 142 மனுக்கள் பரிசீலனை
கும்பகோணத்தில் நடந்த ஜமாபந்தியில் 142 மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது.
கும்பகோணம்;
கும்பகோணம் வருவாய் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் 2022-ம் ஆண்டுக்கான வருவாய் தீர்வாய கணக்கு தணிக்கை எனப்படும் ஜமாபந்தி தொடங்கியது.நிகழ்ச்சியில் கும்பகோணம் அருகே உள்ள முருக்கங்குடி மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 22 கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அதிகாரிகளிடம் அளித்தனர். நேற்று நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட வருவாய் அலுவலர் சுகபுத்ரா தலைமை தாங்கினார். கும்பகோணம் தாசில்தார் தங்க பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமான வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர். இதில் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, பல்வேறு சான்றிதழ்கள் வேண்டி மொத்தம் 142 மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டு 5 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.