771 பயனாளிகளுக்கு ரூ.143 கோடி கடனுதவி


771 பயனாளிகளுக்கு ரூ.143 கோடி கடனுதவி
x

771 பயனாளிகளுக்கு ரூ.143 கோடி கடனுதவி

தஞ்சாவூர்

தஞ்சையில் நடந்த விழாவில் 771 பயனாளிகளுக்கு ரூ.143 கோடி கடனுதவியை அரசு கொறடா கோவி.செழியன், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. ஆகியோர் வழங்கினர்.

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், திருச்சி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி நேரடி கடனுதவிகளை வழங்கியதை தொடர்ந்து, மகளிர் திட்டம் சார்பில் தஞ்சை மாவட்டத்தில் கடனுதவி வழங்கும் விழா தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா நூற்றாண்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.விழாவிற்கு எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், ஜவாஹிருல்லா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி, மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ரூ.143 கோடி கடனுதவி

விழாவில் அரசு தலைமை கொறடா கோவி.செழியன், தஞ்சை தொகுதி எம்.பி. எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகளை வழங்கினர். விழாவில் தஞ்சை மாவட்டத்தில் 491 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.21 கோடியே 99 லட்சமும், 280 ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகளுக்கு ரூ.120 கோடியே 96 லட்சம் மதிப்பிலான வங்கி கடனுதவிகளும் வழங்கப்பட்டன. மொத்தம் 771 பயனாளிகளுக்கு ரூ.142 கோடியே 95 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.

விழாவில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.முடிவில் மகளிர் திட்ட அலுவலர் லோகேஸ்வரி நன்றி கூறினார்.


Next Story