145 மதுபாட்டில்கள் பறிமுதல்


145 மதுபாட்டில்கள் பறிமுதல்
x

குடியாத்தத்தில் 145 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர்

சுதந்திர தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் குடியாத்தம் நேதாஜி பகுதியில் பரப்பரப்பான இடத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் உள்ள பாரில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் காவல்துறைக்கும், வருவாய்த்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன் தலைமையில், தாசில்தார் விஜயகுமார், துணை தாசில்தார் சுபிசந்தர் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் திடீரென அந்த பகுதியில் உள்ள பாரில் சோதனையிட்டனர். அப்போது மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரிய வந்தது.

இதனை அடுத்து வருவாய்த்துறையினர் அங்கிருந்து 145 மது பாட்டில்களை பறிமுதல் செய்து குடியாத்தம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


Next Story