ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான தேர்வை 1,453 பேர் எழுதினர்
ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான தேர்வை 1,453 பேர் எழுதினர்
தஞ்சாவூர்
தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணிக்கான தேர்வு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நேற்று நடந்தது. தஞ்சை மாவட்டத்தில் இந்த தேர்வில் பங்கேற்பதற்காக 2,927 பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர். இதற்காக தஞ்சை பாரத் கல்லூரி, கலைமகள் பள்ளி, மேக்ஸ்வெல் மெட்ரிக் பள்ளி, குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி, பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம், அடைக்கலமாதா கல்லூரி ஆகிய இடங்களில் 11 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த தேர்வை 1,453 பேர் எழுதினர். 1,474 பேர் தேர்வு எழுத வரவில்லை. தஞ்சை மேக்ஸ்வெல் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற இந்த தேர்வை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story