சூதாடிய 15 பேர் கைது


சூதாடிய 15 பேர் கைது
x
திருப்பூர்


திருப்பூர் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள தனியார் கட்டிடத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக வடக்கு போலீஸ் நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் விரைந்து சென்று அங்கு அதிரடி சோதனை நடத்தினார்கள். அங்கு பணம் வைத்து சூதாடிய 15 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story