ஆணையரை கண்டித்து குளச்சல் நகராட்சியில் 15 கவுன்சிலர்கள் போராட்டம்
ஆணையரை கண்டித்து குளச்சல் நகராட்சியில் 15 கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குளச்சல்:
ஆணையரை கண்டித்து குளச்சல் நகராட்சியில் 15 கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கவுன்சிலர்கள் போராட்டம்
குளச்சல் நகராட்சியில் நேற்று துணை தலைவர் உள்பட 15 கவுன்சிலர்கள் ஆணையரின் நடவடிக்கையை கண்டித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதாவது நகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் மாத வாடகை பாக்கியுள்ள கடைகளை பொருட்களோடு சீல் வைப்பது, குடிநீர் நிலுவைத்தொகை இல்லாத வீடுகளில் குடிநீர் இணைப்பை துண்டிப்பது, நடப்பாண்டில் செலுத்த வேண்டிய வரிகளுக்கு கால அவகாசம் இருந்தும், உடனடியாக வரிகளை செலுத்தாத வீடுகளில் குடிநீரை துண்டிப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் நகராட்சி ஆணையரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுவதாக கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.
தீர்வு கிடைக்கும் வரை...
இந்த போராட்டத்தில் துணைத் தலைவர் ஷெர்லி பிளாரன்ஸ், கவுன்சிலர்கள் ஜான்சன், ரகீம், லாரன்ஸ், சஜிலா, சந்திர வயோலா, பனிகுருசு, மேரி, ஷீலா ஜெயந்தி, ரமேஷ், ஜாண்பிரிட்டோ, சுஜித்ரா, தனலெட்சுமி, வினேஷ், திலகா ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் இதுகுறித்து கவுன்சிலர்கள் கூறுகையில், எங்கள் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என கூறினர்.
இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறாததால் இரவிலும் போராட்டம் நீடித்தது.