அருப்புக்கோட்டை நர்சிங் கல்லூரி தாளாளருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
அருப்புக்கோட்டை நர்சிங் கல்லூரி தாளாளருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர்,
அருப்புக்கோட்டையில் நர்சிங் மற்றும் கேட்டரிங் கல்லூரியில் மாணவிகளிடம் வீடியோ காலில் ஆபாசமாக பேசிய கல்லூரி தாளாளர் தாஸ்வின் ஜான் கிரேஸ் (வயது 40) கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து தாஸ்வின் ஜான் கிரேஸ் விருதுநகர் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே பா.ஜ.க.வை சேர்ந்த தாஸ்வின் ஜான் கிரேஸ் என்பவரை கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக பா.ஜ.க. விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் அறிவித்துள்ளார்.
Related Tags :
Next Story