கலைத்துறையில் சாதனை படைத்த 15 பேர் விருதுக்கு தேர்வு
கலைத்துறையில் சாதனை படைத்த 15 பேர் விருதுக்கு தேர்வு செய்யபபட்டனர்.
கலைத்துறையில் சாதனை படைத்த 15 பேர் விருதுக்கு தேர்வு செய்யபபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட கலை மன்ற கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், கலை முதுமணி விருதுக்கு சம்பத்துராயன்பேட்டை கிராமத்தை சேர்ந்த தமிழிசை பாடகர் பீதாம்பரம், பனப்பாக்கத்தைச் சேர்ந்த ஓவியக் கலைஞர் லோகநாதன், ஆற்காட்டைச் சேர்ந்த ஆர்மோனிய கலைஞர் சேகர், கலை நன்மணி விருதுக்கு அரக்கோணத்தைச் சேர்ந்த மணல் சிற்பக் கலைஞர் சாமுவேல் செல்லத்துரை, நெடும்புலி புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆர்மோனிய கலைஞர் அருணகிரி, அரக்கோணத்தை சேர்ந்த சிலம்பாட்டக் கலைஞர் புகாரி, கலைச்சுடர்மனி விருதுக்கு கணியனூரை சேர்ந்த ஓவியர் சண்முகம், ஜாகீர் வளவனூர் பகுதியைச் சேர்ந்த மிருதங்க கலைஞர் பாபு, வாலாஜாவை சேர்ந்த பரதநாட்டிய கலைஞர் வைஷ்ணவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் கலை வளர்மணி விருதுக்கு வேப்பூர் பகுதியைச் சேர்ந்த தவில் கலைஞர் டில்லி பாபு, அம்மூரை சேர்ந்த நாதஸ்வர கலைஞர் பிரகாஷ், தணிகை போளூரை சேர்ந்த தெருக்கூத்து கலைஞர் தரணி, கலை இளமணி விருந்துக்கு வாலாஜாவை சேர்ந்த பரதநாட்டிய கலைஞர் சக்தி பிரியா, ஆற்காட்டைச் சேர்ந்த சிலம்பாட்ட கலைஞர் வருண்ராஜ், காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த பரதநாட்டிய கலைஞர் ஜனனி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில் கலை பண்பாட்டு துறையின் துணை இயக்குனர் ஹேமநாதன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வடிவேலு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அசோக், சுற்றுலா அலுவலர் இளமுருகன், வேலூர் அருங்காட்சியக காப்பாளர் சரவணன், எழுத்தாளர் சுகுமாரன், கலை ஆர்வலர் பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டு, விருத்தாளர்களை தேர்வு செய்தனர்.