மது விற்ற 15 பேர் சிக்கினர்


மது விற்ற 15 பேர் சிக்கினர்
x

மது விற்ற 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் மதுபானங்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்வோர் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு, சூப்பிரண்டு சரவணன் உத்தரவிட்டார். அதன்பேரில் நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி, வள்ளியூர், அம்பை, சேரன்மாதேவி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 12-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை சோதனை நடத்திய போலீசார், மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக 15 பேரை கைது செய்தனர். மேலும் கைதானவர்களிடம் இருந்து 162 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Next Story