ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 15 பவுன் நகை திருட்டு


ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 15 பவுன் நகை திருட்டு
x

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 15 பவுன் நகையை திருடி சென்றனர்.

விருதுநகர்

சிவகாசி-திருத்தங்கல் ரோட்டை சேர்ந்தவர் தங்கராணி (வயது 57). இவரது கணவர் சார்லஸ் செல்வராஜ். அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தங்கராணி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு விருதுநகர் மேலரதவீதியிலுள்ள ஒரு நகை பட்டறையில் 11 பவுன் சிலுவை டாலர் கொண்ட தாலி செயின் மற்றும் 4 பவுனில் மற்றொரு செயின் வாங்கி இருந்தார். தற்போது இந்த நகைகள் சேதாரமாகி விட்ட நிலையில் அவற்றை புதுப்பிப்பதற்காக ஒரு பையில் எடுத்துக்கொண்டு தன் கணவருடன் விருதுநகருக்கு சிவகாசியில் இருந்து மதுரை செல்லும் பஸ்சில் வந்தார். விருதுநகர் ஆத்துப்பாலம் அருகே இறங்கி நகைபட்டறைக்கு வந்து தனது பையை பார்த்தபோது பையில் இருந்த நகைகள் மாயமாகியிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தங்கராணி இதுபற்றி கொடுத்த புகாரின் பேரில் இந்நகர் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.Next Story