வாடகை பாக்கி செலுத்தாத 15 கடைகளுக்கு 'சீல்'
வாடகை பாக்கி செலுத்தாத 15 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
திருப்பத்தூர் நகராட்சிக்கு சொந்தமாக கிருஷ்ணகிரி மெயின் ரோடு, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், தினசரி காய்கறி மார்க்கெட் அருகே, ஆலங்காயம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 608 கடைகள் உள்ளது. இந்த கடைகளுக்கு வாடகை செலுத்தாமல் பலர் பாக்கி வைத்துள்ளனர். இவர்களுக்கு பலமுறை நகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பியும், நேரில் சென்று கேட்டும் வாடகை பாக்கி செலுத்தவில்லை.
இதனால் நகராட்சி ஆணையாளர் ஜெயராம ராஜா உத்தரவின் பேரில், வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் கிருஷ்ணகிரி மெயின் ரோடு, பழைய, புதிய பஸ் நிலையத்தில் வாடகை செலுத்தாமல் உள்ள 15 கடைகளுக்கு சீல் வைத்தனர். இது குறித்து நகராட்சி ஆணையாளர் கூறுகையில் நகராட்சியில் வளர்ச்சிப்பணிகள் செய்ய உடனடியாக நகராட்சிக்கு செலுத்த வேண்டிய பாக்கியத்தொகையை கட்ட வேண்டும். கட்டத் தவறினால் 'சீல்' வைத்து ஜப்தி நடவடிக்கை மேற்கொண்டு ஏலம் விடப்படும் என தெரிவித்தார்.