அதிவேகமாக இயங்கிய 15 வாகனங்களுக்கு அபராதம்
அதிவேகமாக இயங்கிய 15 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
வேலூர்
வேலூர் சரக இணை போக்குவரத்து கமிஷனர் இளங்கோவன் தலைமையில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது வாகனங்களின் வேகத்தை அளவீடும் கருவி மூலம் அதிவேகமாக இயங்கிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் 145 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் 15 வாகனங்கள் அதிவேகமாக இயங்கியது தெரிய வந்தது. அந்த வாகனங்களுக்கு ரூ.22 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் முகப்பு விளக்கில் ஸ்டிக்கர் ஒட்டாதது, தகுதிச்சான்று புதுப்பிக்காதது, அதிகபாரம் ஏற்றியது உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறிய வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story