வேன் டிரைவர் திடீரென 'பிரேக்' போட்டதால் 15 தொழிலாளர்கள் படுகாயம்


வேன் டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் 15 தொழிலாளர்கள் படுகாயம்
x

இருசக்கர வாகனத்தில் மோதாமல் இருக்க வேன் டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் 15 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

விருதுநகர்

ராஜபாளையம்,

இருசக்கர வாகனத்தில் மோதாமல் இருக்க வேன் டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் 15 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

மில் தொழிலாளர்கள்

ராஜபாளையம் அருகே வன்னியம்பட்டி சாலையில் உள்ள ஒரு மில்லில் தென்காசி மாவட்டம் மலையன்குளம் பகுதியை சேர்ந்த சங்கர் கனி என்பவர் ஒப்பந்த அடிப்படையில் மில் தொழிலாளர்களை ஏற்றுக்கொண்டு வேனில் சென்று கொண்டு இருந்தார்.

கீழ ராஜகுலராமன் சாலை வழியாக அட்டை மில் முக்கு ரோடு அருேக வேன் வரும் போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் வேன் மீது மோதுவது போல் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வேன் டிரைவர் திடீரென பிரேக் போட்டார்.

15 பேர் படுகாயம்

இதனால் வேனில் இருந்த 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் படுகாயமடைந்த வேல் தாய் (வயது 50), மாரீஸ்வரி (39), மணி (55), காளியம்மாள் (40), கலா ராணி (32) ஆகிய 5 பேரும் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்ைச பெற்று வருகின்றனர்.

அதேபோல ராமலட்சுமி (40), சங்கீதா (26), சுப்புலட்சுமி (45), அமுத புஷ்பம் (24), சங்கர் மணி (35), மாரிச்செல்வம் (23), சீதாலட்சுமி (55), ரமா (43) சரஸ்வதி (45), கற்பக ராணி (34) ஆகிய 10 பேர் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து சங்கர் கனி அளித்த புகாரின் பேரில் கீழ ராஜகுலராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story