150 ஏக்கர் வாழை மரங்கள் தண்ணீரில் மூழ்கின


150 ஏக்கர் வாழை மரங்கள் தண்ணீரில் மூழ்கின
x

காட்டுப்புத்தூர் அருகே 150 ஏக்கர் வாழை மரங்கள் தண்ணீரில் மூழ்கின.

திருச்சி

காட்டுப்புத்தூர் அருகே 150 ஏக்கர் வாழை மரங்கள் தண்ணீரில் மூழ்கின.

பலத்த மழை

காட்டுப்புத்தூர் மற்றும் சீலைபிள்ளையார் புதூரில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்தது. இந்த மழையால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

காட்டுப்புத்தூர் பகுதியில் ரஸ்தாலி, கற்பூரவள்ளி, பூவன் உள்ளிட்ட வாழைகள் சாகுடி செய்யப்பட்டுள்ளன. தற்போது, பெய்து வரும் மழையால் தத்துகட்டை, பத்தான்சை, வண்ணான் கணி, வக்கீல் குடிசை, ஆகிய பகுதிகளில் சாகுடி செய்யப்பட்ட வாழை தோட்டங்களில் மழை நீர் புகுந்தது.

சுமார் 150 ஏக்கர் வாழைதோட்டங்களில் தண்ணீர் புகுந்தன. தண்ணீரில் மூழ்கியதால் வாழை மரக்கன்றுகள் பழுப்பு நிறம் போல் காணப்படுகின்றன. இதனால் பல லட்சம் ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளது.

தூர்வார கோரிக்கை

குத்தனை வாய்க்கால், மணல் வாய்க்கால், கிளை வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் மழைநீர் தேங்கி பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் இந்த வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story